Loading...
இந்திய முறைசார் துறையில் வேலைவாய்ப்பு வளர்ச்சி: பெண்களின் பங்களிப்பில் தொடரும் பின்னடைவு
முறைசார் பணித் துறை வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து குறைவாகவே உள்ளது

இந்திய முறைசார் துறையில் வேலைவாய்ப்பு வளர்ச்சி: பெண்களின் பங்களிப்பில் தொடரும் பின்னடைவு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 14, 2026
05:34 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் முறைசார் பணித் துறை (Formal Sector) வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) ஏப்ரல் முதல் ஜூலை வரை 69.03 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து குறைவாகவே உள்ளது. குவஸ் கார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Female LFPR) 33.7% ஆக மட்டுமே உள்ளது.

பாலின இடைவெளி

பாலின இடைவெளி மற்றும் துறைசார் பங்களிப்பு

நெகிழ்வு தன்மையுடைய தொழிலாளர் படையில் பெண்களின் தேசிய சராசரி 34.3% ஆக உள்ள நிலையில், குவஸ் கார்ப் தரவுகளின்படி 25% மட்டுமே பெண்கள் உள்ளனர்.

குவஸ் கார்ப் நிறுவனத்தின் சொந்த பணியாளர்களில் பெண்கள் வெறும் 17% (சுமார் 82,000 பேர்) மட்டுமே ஆவர்.

விற்பனை, விநியோகம் மற்றும் களப்பணிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டெலிகாம்: 9%

விவசாயம்: 6%

பொதுத்துறை நிறுவனங்கள்: 5%

தகவல் தொழில்நுட்பம் (IT/ITeS): 32%

ஹவுஸ்ஹோல்ட் ஆர்கனைசேஷன்: 26%

சில்லறை வர்த்தகம்: 18%

லாஜிஸ்டிக்ஸ்: 17%

ஆதிக்கம்

இளம் பெண்களின் ஆதிக்கம்

குவஸ் கார்ப் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் பணியாளர்களில் 35% பேர் 21-25 வயதுக்குட்பட்டவர்கள்.

மேலும் 27% பேர் 25-30 வயதுக்குட்பட்டவர்கள்.

முறைசார் துறையில் பெண்களின் பங்களிப்பை உயர்த்த வேலைவாய்ப்பு கொள்கைகளில் மாற்றங்கள் தேவை என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT