
2025ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5-7% வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பு
செய்தி முன்னோட்டம்
இன்று நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு, 2025ஆம் நிதியாண்டில்(FY25) உண்மையான GDP வளர்ச்சி 6.5-7% இருக்கும் என்று கணித்துள்ளது.
"கன்சர்வேடிவ் முறையில் 6.5-7 சதவிகிதம் உண்மையான ஜிடிபி வளர்ச்சி இருக்கும் சர்வே கணித்துள்ளது. அபாயங்கள் சமநிலையில் உள்ளன. சந்தை எதிர்பார்ப்புகள் அதிக அளவில் உள்ளன" என்று 2023-24 பொருளாதார ஆய்வு கூறுகிறது.
பொருளாதாரத்தின் கண்ணோட்டம் பிரகாசமாக இருப்பதாகவும், 2023ஆம் நிதியாண்டில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதார வளர்ச்சியின் வேகம் 2024ஆம் நிதியாண்டு வரை நீதித்துள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
"மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டதனால், உலக பொருளாதார சவால்கள் இந்தியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்தது" என்று அந்த ஆய்வு கூறுகிறது.
இந்தியா
மொத்த மதிப்பு கூட்டல் 7.2 சதவிகிதம் வளர்ந்தது
"இதன் விளைவாக, 2024ஆம் நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான GDP 8.2 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 7 சதவிகிதத்திற்கும் மேலான வளர்ச்சியைப் பதிவுசெய்தது. நிலையான நுகர்வு தேவை மற்றும் சீராக மேம்படுத்தப்பட்ட முதலீட்டு தேவை ஆகியவற்றால் இது உந்தப்பட்டது." என்று 2023-24 பொருளாதார ஆய்வு கூறுகிறது.
"மொத்த மதிப்பு கூட்டல்(GVA ) 2011-12ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 2024ஆம் நிதியாண்டில் 7.2 சதவிகிதம் வளர்ந்தது. நிலையான (2011-12) விலைகளில் நிகர வரிகள் 19.1 சதவிகிதம் வளர்ச்சியடைந்தன. மாநில நிலைகள் மற்றும் மானியச் செலவினங்களின் பகுத்தறிவு ஆகியவை 2024ஆம் நிதியாண்டில் GDP மற்றும் GVA வளர்ச்சிக்கு இடையே உள்ள வேறுபாட்டிற்கு வழிவகுத்தது" என்று அது மேலும் கூறியுள்ளது.