LOADING...
இந்தியா - பிரிட்டன் வரலாற்றுச் சிறப்புமிக்க 'CETA' வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அதிகாரப்பூர்வமாக அமல்
CETA ஒப்பந்தம் ஜூலை 15 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது

இந்தியா - பிரிட்டன் வரலாற்றுச் சிறப்புமிக்க 'CETA' வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அதிகாரப்பூர்வமாக அமல்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 18, 2026
10:28 am

செய்தி முன்னோட்டம்

இந்திய-பிரிட்டன் இருதரப்பு உறவுகளில் மைல்கல்லாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய 'இந்தியா - பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்'(CETA) வரும் ஜூலை 15 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது. பிரெக்சிற்றுக்கு பிந்தைய பிரிட்டனின் மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை பிரிட்டன் அரசு வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிரிட்டனுக்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ஊக்கம்

இருநாட்டு வர்த்தகத்திற்கும் கிடைக்கப் போகும் பிரம்மாண்ட ஊக்கம்

பல ஆண்டுகால தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எட்டப்பட்டுள்ள இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) மூலம் இரு நாடுகளுக்கும் இடையே பின்வரும் முக்கியப் பலன்கள் கிடைக்கப் பெறும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை பெருமளவில் குறைக்கின்றன. வரும் ஆண்டுகளில் இருநாட்டு வர்த்தகம் பில்லியன் கணக்கான பவுண்டுகள் உயரும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் (IT), மருந்தகம் (Pharmaceuticals), நிதிச் சேவைகள் மற்றும் சேவைத் துறைகளில் பொருளாதாரக் கூட்டாண்மை பல மடங்கு வலுவடையும். வர்த்தகத் தடைகள் நீக்கப்பட்டு, ஒழுங்குமுறை நடைமுறைகள் எளிமையாக்கப்படுவதால், இரு நாட்டு நுகர்வோருக்கும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை கணிசமாகக் குறையும்.

Advertisement