Page Loader
லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களை இறக்குமதி செய்யக் கட்டுப்பாடு
லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களை இறக்குமதி செய்யக் கட்டுப்பாடு

லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களை இறக்குமதி செய்யக் கட்டுப்பாடு

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 03, 2023
03:08 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் லேப்டாப்கள், டேப்லட்கள், பெர்சனல் கம்யூட்டர்கள், சர்வர்கள் மற்றும் இதர வகை சிறிய கணினிகள் ஆகிய மின்னணு சாதனங்களின் இறக்குமதியை புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிவித்திருக்கிறது மத்திய வர்த்தக அமைச்சகம். மேற்கூறிய மின்னணு சாதனங்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், அதற்கான உரிமத்தைப் பெற்று, அதன்பின்பே இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் அறிவித்திருக்கிறது மத்திய வர்த்தக அமைச்சகம். இந்தியாவில் பெட்ரோலியம் பொருட்களையடுத்து, அதிகளவில் இறக்குமதி செய்யப்படுபவை மின்னணு சாதனங்களே. நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதி செய்யும் அளவு அதிகரித்து வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது மத்திய அரசு. கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19.76 பில்லியன் டாலர்கள் அளவிலான மின்சாதனப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

மின்சாதனங்களை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கும் கட்டுப்பாடா? 

மேற்கூறிய மின்சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு மட்டுமே தற்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. பேகேஜ் விதிமுறைகள் அடிப்படையில் கொண்டு வரப்படும் மின்சாதனப் பொருட்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கிறது. மேலும், விற்பனைக்காக அன்றி ஆராய்ச்சி, மேம்பாடு, பழுதுநீக்கம் மற்றும் பரிசோதனை உள்ளிட்ட இதர பயன்பாடுகளுக்காக மேற்கூறிய பொருட்களை இந்தியாவிற்குகள் கொண்டு வர விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், ஒரு முறையில் 20 மின்சாதனப் பொருட்களை மட்டுமே கொண்டு வரும் வகையில் அளவுகோளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அப்படி கொண்டு வரப்படும் மின்சாதனப் பொருட்களை, குறிப்பிட்ட பயன்பாடு முடிந்ததும் பயன்படுத்த முடியாத வகையில் அழித்து விட வேண்டும் அல்லது மீண்டும் ஏற்றுமதி செய்துவிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.