2026-ல் 1.75 லட்சத்தை எட்டுமா? மார்ச் 2-க்கான அதிரடி கணிப்பு
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையிலும், இந்திய சந்தையிலும் (MCX) தங்கத்தின் விலை மார்ச் 2-ஆம் தேதியான இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. எம்.சி.எக்ஸ் (MCX) சந்தையில் தங்கம் ஒரு வலுவான ஏற்றத்தைச் சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி தங்கம் 2% வரை உயர்ந்துள்ளது. சந்தை நிபுணர்களின் கணிப்புப்படி, தங்கம் விரைவில் 1,75,000 முதல் 1,78,000 ரூபாய் (MCX - 1kg/Unit அடிப்படையில்) என்ற நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
காரணங்கள்
விலை உயர்வுக்கான காரணங்கள்
1. போர் பதற்றம்: ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதும், அதற்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் நடத்திய தாக்குதல்களும் தங்கத்தின் தேவையை அதிகரித்துள்ளன. 2. டாலர் மதிப்பு: அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று பலவீனமடைந்ததும் தங்கத்தின் விலையேற்றத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளது. 3. சுங்க வரி குழப்பம்: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் சில தீர்ப்புகள் மற்றும் புதிய வரி விதிப்புகள் உலகளாவிய வர்த்தகத்தில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன.
அறிவுரை
நிபுணர்களின் அறிவுரை
தற்போது தங்கம் வாங்குபவர்கள் சந்தையின் ஏற்ற இறக்கத்தைக் கவனித்துச் செயல்பட வேண்டும். விலை ரூ. 1,62,000 என்ற நிலைக்குக் குறையும் போது வாங்குவது (Buy on Dips) லாபகரமாக இருக்கும் என மோதிலால் ஓஸ்வால் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் மானவ் மோடி தெரிவித்துள்ளார். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு தங்கம் ஒரு சிறந்த தேர்வாக தொடர்கிறது.