Page Loader
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சலின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சலின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சலின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

எழுதியவர் Prasanna Venkatesh
Nov 10, 2023
01:52 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநரான பவன் முஞ்சலின் சொத்துக்களை முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் மாதம் பவன் முஞ்சலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்திருந்தது அமலாக்கத்துறை. அதனைத் தொடர்ந்து தற்போது, அவருக்கு சொந்தமான ரூ.24.95 கோடி மதிப்புடைய மூன்று சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழே முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை. வெளிநாட்டுப் பணத்தை இந்தியாவில் இருந்து சட்டத்திற்குப் புறம்பாக வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றாக வருவாயப் புலனாய்வு இயக்குநரகம் அளித்த புகாரின் பேரில் பவன் முஞ்சல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது அமலாக்கத்துறை.

ஹீரோ மோட்டோகார்ப்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை: 

இந்திய மதிப்பில் ரூ.54 கோடி மதிப்புடைய வெளிநாட்டுப் பணத்தை சட்டத்திற்குப் புறம்பாக வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றதாக பவன் முஞ்சல் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. சட்டத்திற்குப் புறம்பாக வெளிநாட்டுப் பணத்தை எடுத்துச் சென்றது மட்டுமின்றி, அதனை தன்னுடைய சொந்த செலவுகளுக்காகவும் அவர் செலவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை பவன் முஞ்சலுக்கு சொந்தமான ரூ.50 கோடி வரையிலான சொத்துக்களை பறிமுதல் செய்தும் முடக்கியும் இருக்கிறது அமலாக்கத்துறை. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் பவன் முஞ்சலுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.