
குரோம்-ஐ வாங்கத் தயாராக இருக்கும் யாஹூ: கூகிள் அதிகாரி தகவல்
செய்தி முன்னோட்டம்
கூகிள் நிறுவனம் அமெரிக்க நீதித்துறையில் 'தேடல் ஏகபோக' விசாரணையை எதிர்கொள்கிறது.
இந்த விசாரணையின் இறுதியில் நீதிமன்றம் நிறுவனத்தை Chrome ஐ விற்க கட்டாயப்படுத்தக்கூடும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து குரோமை வாங்க சக தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
அவற்றில் ஒன்று யாகூ. கூகிள் குரோமை விற்க கட்டாயப்படுத்தப்பட்டால், Chrome பிரவுசரை ஏலம் எடுக்கும் என்று யாகூ இன்க் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.
மேலும் ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, கூகிள் பிரவுசரை விற்பதாக இருந்தால், அதன் மதிப்பு பல்லாயிரக்கணக்கான டாலர்களாக இருக்கலாம் என்று யாகூ சர்ச்சின் பொது மேலாளர் பிரையன் ப்ரோவோஸ்ட் தெரிவிக்கிறார்.
மற்ற நிறுவனங்கள்
குரோமை வாங்க போட்டியிலிருக்கும் மற்ற நிறுவனங்கள்
குரோம் உலாவியை வாங்க ஆர்வம் காட்டிய ஒரே நிறுவனம் யாஹூ மட்டுமல்ல.
நடந்துகொண்டிருக்கும் விசரணையின் போதே ஓபன்ஏஐ மற்றும் பெர்ப்ளெக்ஸிட்டி ஆகிய இரண்டின் நிர்வாகிகளும் குரோம் வாங்க விருப்பம் தெரிவித்தனர்.
டக்டக் கோ நிறுவனமும் இந்த போட்டியில் இருப்பதாக கூறப்பட்டாலும், குரோம் உலாவியை வாங்க தன்னிடம் பணம் இல்லை என்று நிறுவனம் கூறியது.
யாகூ குரோமை கையகப்படுத்த முடிந்தால், நிறுவனத்தின் தேடல் சந்தைப் பங்கு தற்போதைய 3 சதவீதத்திலிருந்து இரட்டை இலக்கங்களுக்கு உயரும் என்று ப்ரோவோஸ்ட் கூறுகிறார்.
குரோம் வாங்க பல பில்லியன் டாலர்கள் செலவாகும் என்றாலும், யாகூவின் தாய் நிறுவனமான அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் நிதியைப் பெற உதவும் என்று அவர் கூறினார்.