ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்தது; இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணிகள் என்ன?
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.90 உயர்ந்து ரூ..6,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.720 உயர்ந்து ரூ.55,360ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,390-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,120ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை 1 ரூபாய் அதிகரித்து, கிராம் ஒன்று, ரூ.100.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உயர்ந்த தங்கத்தின் விலை
விலை உயர்வுக்கு காரணிகள் என்ன?
முதலீட்டாளர் உணர்வு மற்றும் சந்தை நிலைப்பாடு: தங்கம் விலை அதிகரிப்பில் சந்தை முதலீட்டாளர்களின் உணர்வு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. தங்கத்தின் விலைகள் சற்று குறைந்தால், சந்தை முதலீட்டாளர்கள் அதிக தங்கத்தை வாங்கத் தயாராக இருப்பதால், விலை எப்போதும் மேல்நோக்கியே உள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள்: புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் தங்கத்தின் உலகின் முன்னணி நுகர்வோரான சீனாவின் வலுவான தேவை ஆகியவையும் விலை உயர்வுக்கு பங்களித்துள்ளன. முதலீட்டு தாக்கங்கள்: தற்போதைய சூழ்நிலை தங்க முதலீடுகளுக்கு சாதகமான சூழலை அளிக்கிறது. குறிப்பாக பொருளாதார நிச்சயமற்ற நிலையில் தங்கத்தின் மீது முதலீடு என்பது பாதுகாப்பான புகலிடமாக இருக்கும்.