LOADING...
சவரனுக்கு ₹720 சரிவு; தேர்தல் நாளில் தங்கம் வெள்ளி விலை வீழ்ச்சி
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சவரனுக்கு ₹720 சரிவு; தேர்தல் நாளில் தங்கம் வெள்ளி விலை வீழ்ச்சி

எழுதியவர் Sekar Chinnappan
Apr 23, 2026
10:34 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (ஏப்ரல் 23) குறைந்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹90 குறைந்து ₹14,160 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹720 குறைந்து ₹1,13,280 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹98 குறைந்து ₹15,448 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹784 குறைந்து ₹1,23,584 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹70 குறைந்து ₹11,810 ஆகவும், ஒரு சவரன் ₹560 குறைந்து ₹94,480 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹270.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,70,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா - ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement