
ஒரே நாளில் குறைந்த தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.2,200 சரிவு
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே உச்சத்தை நோக்கி சென்ற தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.2,200 சரிந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.275 குறைந்து ரூ.9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.2,200 குறைந்து ரூ.72,120ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 6,925-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.78,680ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ஒன்று ரூ.111-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.72,120க்கு விற்பனை.#SunNews | #GoldRate | #Chennai pic.twitter.com/UL6aE2hc4P
— Sun News (@sunnewstamil) April 23, 2025