தங்கம் வெள்ளி விலைகள் மீண்டும் தாறுமாறு சரிவு; இன்றைய விலை நிலவரம் என்ன?
செய்தி முன்னோட்டம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, சனிக்கிழமை (ஜனவரி 31) கடுமையாக சரிந்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹950 குறைந்து ₹14,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹7,600 குறைந்து ₹1,19,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹1,036 குறைந்து ₹16,255 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹8,288 குறைந்து ₹1,30,040 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை விவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹500 குறைந்து ₹12,800 ஆகவும், ஒரு சவரன் ₹4,000 குறைந்து ₹1,02,400 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் சனிக்கிழமை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹55 குறைந்து ₹350.00 ஆகவும், ஒரு கிலோ ₹3,50,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சர்வதேச சூழல் போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.