இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 1
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,570-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,560-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ரூ.6,076-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.48,608-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை 1 ரூபாய் உயர்ந்து ரூ.81-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.