Loading...
தொடர்ந்து நான்காவது நாளாக கடும் வீழ்ச்சியில் தங்கம் விலை; இன்றைய நிலவரம் 
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தொடர்ந்து நான்காவது நாளாக கடும் வீழ்ச்சியில் தங்கம் விலை; இன்றைய நிலவரம் 

எழுதியவர் Sekar Chinnappan
Oct 23, 2026
10:18 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, தொடர்ந்து நான்காவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹175 குறைந்து ₹13,060 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,400 குறைந்து ₹1,04,480 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹190 குறைந்து ₹14,248 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,520 குறைந்து ₹1,13,984 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.

அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹145 குறைந்து ₹10,690 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,160 குறைந்து ₹85,520 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹225.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,25,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT