தொடர்ந்து இறங்கு முகத்தில் தங்கம் விலை; இன்றைய நிலவரம்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை (அக்டோபர் 22), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹155 குறைந்து ₹13,235 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,240 குறைந்து ₹1,05,880 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹170 குறைந்து ₹14,438 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,360 குறைந்து ₹1,15,504 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் சரிவு
18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.
அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹135 குறைந்து ₹10,835 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,080 குறைந்து ₹86,680 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹225.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,25,000 ஆக விற்கப்படுகிறது.