Loading...
தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை சரிவு; இன்றைய நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை சரிவு; இன்றைய நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 15, 2026
10:13 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை நான்காவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை (அக்டோபர் 15), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹75 குறைந்து ₹13,515 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹600 குறைந்து ₹1,08,120 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹82 குறைந்து ₹14,744 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹656 குறைந்து ₹1,17,952 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் சரிவு

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.

அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹50 குறைந்து ₹11,115 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 குறைந்து ₹88,920 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹240.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,40,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT