இறங்கிய வேகத்தில் விர்ர்! தடாலடியாக ஏறிய தங்கம் விலை; இன்றைய நிலவரம்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 12) தங்க விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹300 அதிகரித்து ₹13,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,400 அதிகரித்து ₹1,10,400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹327 அதிகரித்து ₹15,055 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,616 அதிகரித்து ₹1,20,440 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹240 அதிகரித்து ₹11,550 ஆகவும், ஒரு சவரன் ₹1,920 அதிகரித்து ₹92,400 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 அதிகரித்து ₹265 ஆகவும், ஒரு கிலோ ₹2,65,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா -ஈரான் போருக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சூழலில், தற்போது மீண்டும் பதற்றமான சூழல் அதிகரித்துள்ள நிலையில், தங்கம் விலை அதிகரித்துள்ளது நகை வாங்க திட்டமிட்டவர்களிடையே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.