LOADING...
தொடர்ந்து சரிவு விலையில் தங்கம்; இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
தொடர்ந்து சரிவு விலையில் தங்கம்

தொடர்ந்து சரிவு விலையில் தங்கம்; இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 07, 2026
12:32 pm

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், செவ்வாய்கிழமை (ஜூலை 7) தங்க விலை குறைந்துள்ளது. அதன்படி, செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹160 குறைந்து ₹13,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,280 குறைந்து ₹1,07,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹175 குறைந்து ₹14,618 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,400 குறைந்து ₹1,16,944 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹100 குறைந்து ₹11,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹800 குறைந்து ₹89,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே செவ்வாய்கிழமை வெள்ளி விலையில் மாற்றமின்றி தொடர்கிறது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹250 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது, ஒரு கிலோ வெள்ளி ₹250000 ஆக விற்கப்படுகிறது.

Advertisement