ஆபரண தங்கத்தின் விலை நிலவரம்: தங்கத்தின் விலை இனி குறையும்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.15 குறைந்து ரூ.6,810க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.120 குறைந்து ரூ.54,480ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,429-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,432ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை ரூ.95.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சுங்க வரி குறைக்கப்பட்டதால் தங்கத்தின் விலை இனி குறையும்
தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 6% ஆகவும், பிளாட்டினம் மீதான சுங்க வரியை 6.5% ஆகவும் குறைக்க உள்ளதாக பட்ஜெட் 2024இல் மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 10% இருந்து 6% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் வெள்ளி மற்றும் தங்கம் விலை அடுத்த சில நாட்களில் கணிசமாக குறையுள்ளது. மத்திய அரசு தங்கத்தின் மீதான சுந்தர் வரியை எந்த அளவுக்கு குறைக்கிறதோ அந்த அளவுக்கு நகைக் கடைக்காரர்கள் தங்கத்தின் விலையை குறைப்பார்கள் என்பதால், தங்க விலையில் பெரும் மாற்றம் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.