தங்கம் வெள்ளி விலைகள் தொடர்ந்து சரிவு; இன்றைய சவரன் விலை என்ன?
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், திங்கட்கிழமை (ஜூன் 8) தங்க விலை கடுமையாகக் குறைந்துள்ளது. அதன்படி, திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹130 குறைந்து ₹14,070 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,040 குறைந்து ₹1,12,560 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹142 குறைந்து ₹15,349 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,136 குறைந்து ₹1,22,792 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹115 குறைந்து ₹11,795 ஆகவும், ஒரு சவரன் ₹920 குறைந்து ₹94,360 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹260 ஆகவும், ஒரு கிலோ ₹2,60,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா -ஈரான் போருக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில், இரு தரப்பிற்கும் இடையே சிறுசிறு தாக்குதல்கள் நடைபெறும் நிலையில், தங்கம் விலை கடுமையாக குறைந்துள்ளது நகை வாங்க திட்டமிட்டவர்களிடையே மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.