LOADING...
வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலை என்ன? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
திங்கள்கிழமை (ஜூலை 6) தங்க விலை குறைந்துள்ளது

வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலை என்ன? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 06, 2026
12:34 pm

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், திங்கள்கிழமை (ஜூலை 6) தங்க விலை குறைந்துள்ளது. அதன்படி, திங்கள்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹140 குறைந்து ₹13,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,120 குறைந்து ₹1,08,480 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹153 குறைந்து ₹14,793 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,224 குறைந்து ₹1,18,344 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் குறைவு

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹140 குறைந்து ₹11,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,120 குறைந்து ₹90,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே திங்கள்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 குறைந்து ₹250 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது, 1 கிலோ வெள்ளி ₹250000 ஆக விற்கப்படுகிறது.

Advertisement