இரண்டாவது நாளாக உயரும் தங்க விலை; இன்றைய சவரன் விலையை தெரிந்து கொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, செவ்வாய்கிழமை (அக்டோபர் 27), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹50 அதிகரித்து ₹13,135 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 அதிகரித்து ₹1,05,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹54 அதிகரித்து ₹14,329 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹432 அதிகரித்து ₹1,14,632 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமில்லை
18 காரட் தங்கத்தின் விலையும் இன்றும் அதிகரித்துள்ளது.
அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹45 அதிகரித்து ₹10,750 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹360 அதிகரித்து ₹86,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே செவ்வாய்க்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹220.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,20,000 ஆக விற்கப்படுகிறது.