Loading...
'இந்தியாவின் 7% வளர்ச்சி போதாது, 9% வளர்ச்சி தேவை!' 2008 பொருளாதார வீழ்ச்சியைக் கணித்த நிபுணர் எச்சரிக்கை
2008 பொருளாதார வீழ்ச்சியைக் கணித்த நிபுணர் இந்தியாவுக்கு எச்சரிக்கை

'இந்தியாவின் 7% வளர்ச்சி போதாது, 9% வளர்ச்சி தேவை!' 2008 பொருளாதார வீழ்ச்சியைக் கணித்த நிபுணர் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 19, 2026
03:17 pm

செய்தி முன்னோட்டம்

2008 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை துல்லியமாகக் கணித்து உலகையே அதிரவைத்தவர் பொருளாதார நிபுணர் நூரியல் ரூபினி. டாக்டர் டூம் என்று அழைக்கப்படும் இவர், இந்தியப் பொருளாதாரம் குறித்து தற்போது புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவரது கருத்துப்படி, இந்தியா உலகளவில் மிகப்பெரிய வெற்றிப் பாதையில் பயணிக்கிறது. ஆனால், தற்போதைய 7 சதவீத வளர்ச்சி இந்தியாவின் இளைஞர்களுக்கு வேலை வழங்கப் போதுமானது அல்ல. வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய நாட்டின் வளர்ச்சி விகிதம் உடனடியாக 9 சதவீதத்தை எட்ட வேண்டும்.

வேலைவாய்ப்பு சவால்

ஏஐ வருகையும் தலைதூக்கும் வேலைவாய்ப்பு சவாலும்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அதிவேகப் பாய்ச்சல் உலகம் முழுவதும் தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

மென்பொருள் நிறுவனங்கள் முதல் உற்பத்தி ஆலைகள் வரை அனைத்துத் துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பலமே அதன் இளம் மக்கள் தொகைதான். ஆனால், அவர்களுக்குத் தகுந்த வேலைகளை உருவாக்கத் தவறினால், இந்த மக்கள் தொகை பலமே நாட்டின் முடக்கமாக மாறிவிடும்.

மின்னணு மற்றும் வாகன உற்பத்தித் துறைகள் மூலமே அதிக வேலைகளை உருவாக்க முடியும்.

சீனாவைத் தவிர்க்கும் உலகம்

இந்தியாவிற்கு பிரகாசமான வாய்ப்பு

சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டு வரும் புவிசார் அரசியல் மாற்றங்கள் இந்தியாவிற்கு சாதகமாக அமைந்து வருகின்றன.

உலக நாடுகளும் முன்னணி நிறுவனங்களும் தங்கள் உற்பத்தி மையங்களை சீனாவிற்கு வெளியே மாற்றத் தொடங்கிவிட்டன.

பிரெண்ட்ஷோரிங் கொள்கை மூலம் இந்தியாவிற்குப் பெருமளவு முதலீடுகள் வரத் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் வலுப்பெற்று வரிகளும் குறைந்து வருகின்றன.

இதன் மூலம் வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளை வீழ்த்தி இந்தியாவால் சர்வதேசச் சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியும்.

ADVERTISEMENT

டாக்டர் டூம்

யார் இந்த டாக்டர் டூம் நூரியல் ரூபினி?

கடந்த 2006 ஆம் ஆண்டில், அமெரிக்க நிதி அமைப்பில் இருந்த கடன்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சந்தையின் பலவீனத்தை சுட்டிக்காட்டி உலக பொருளாதார வீழ்ச்சியைக் கணித்தவர் ரூபினி.

இதனால் இவருக்கு டாக்டர் டூம் என்ற பெயர் வந்தது. இத்தகைய கடுமையான விமர்சகர் கூட இந்தியாவின் தற்போதைய உள்நாட்டுச் சந்தை மற்றும் சீர்திருத்தங்களைப் பாராட்டியுள்ளார்.

இந்திய அரசு தொடர்ந்து பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்தால், வளர்ச்சி விகிதம் 8 சதவீதத்தைக் கடந்து 9 சதவீதத்தை அடைவது சாத்தியம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT