பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 2.56% உயர்ந்து $62,461.84க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.53% குறைவாகும். இரண்டாவது மிகவும் பிரபலமான கிரிப்டோகரண்ஸி, எதீரியம் , நேற்றிலிருந்து 1.76% உயர்ந்து $2,935.49க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. எதீரியம், கடந்த ஏழு நாட்களில் 4.19% குறைந்துள்ளது. பிட்காயின் $1,233 பில்லியன் சந்தை மூலதனத்தையும், எதீரியம் $353 பில்லியன் சந்தை மூலதனத்தையும் கொண்டுள்ளன. இன்று, பிஎன்பி $589.93க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது நேற்றை விட 0.40% உயர்வாகும். கடந்த வாரத்தில் இருந்து பிஎன்பி 0.27% உயர்ந்துள்ளது.
டாஜ்காயின் 9.60% உயர்ந்துள்ளது
இன்று, XRP $0.55க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது நேற்றை விட 3.03% உயர்வாகும். ஆனால் கடந்த வாரத்தில் இருந்து XRP 5.94% குறைந்துள்ளது. மேலும், கார்டானோ $0.44 (2.24% உயர்வு) விலைக்கும், டாஜ்காயின் $0.11(9.60% உயர்வு) விலைக்கும் இன்று வர்த்தகம் செய்யப்படுகிறது. சோலானா, போல்கா டாட், ஷிபா இனு மற்றும் பாலிகான் ஆகியவை தற்போது முறையே $147.74 (6.14% உயர்வு), $6.63 ( 2.16% உயர்வு), $0.000022 (7.79% உயர்வு), மற்றும் $0.66(1.42% உயர்வு) ஆகிய விலைகளுக்கு விற்பனையாகிறது. வாராந்திர அட்டவணையின் படி, சோலனா 4.64% குறைந்துள்ளது. அதே நேரத்தில் போல்கா டாட் 6.85% சரிந்துள்ளது. மேலும், கடந்த ஏழு நாட்களில் ஷிபா இனு அதன் மதிப்பில் இருந்து 1.18% வீழ்ச்சியடைந்துள்ளது.