பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.89% குறைந்து $68,413.14க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 10.04% உயர்வாகும்.
இரண்டாவது மிகவும் பிரபலமான கிரிப்டோகரண்ஸி, எதீரியம் , நேற்றிலிருந்து 0.68% உயர்ந்து $3,930.41க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. எதீரியம், கடந்த ஏழு நாட்களில் 14.44% அதிகரித்துள்ளது.
பிட்காயின் $1.34 ட்ரில்லியன் சந்தை மூலதனத்தையும், எதீரியம் $472.12 பில்லியன் சந்தை மூலதனத்தையும் கொண்டுள்ளன.
இன்று, பிஎன்பி $489.69க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது நேற்றை விட 4.14% குறைவாகும். கடந்த வாரத்தில் இருந்து பிஎன்பி 18.97% அதிகரித்துள்ளது.
பிட்காயின்
டாஜ்காயின் 4.59% உயர்வு
இன்று, XRP $0.66க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது நேற்றை விட 0.38% குறைவாகும். ஆனால் கடந்த வாரத்தில் இருந்து XRP 0.33% உயர்ந்துள்ளது.
மேலும், கார்டானோ $0.77(0.84% சரிவு) விலைக்கும், டாஜ்காயின் $0.11 (4.59% உயர்வு) விலைக்கும் இன்று வர்த்தகம் செய்யப்படுகிறது.
சோலானா, போல்கா டாட், ஷிபா இனு மற்றும் பாலிகான் ஆகியவை தற்போது முறையே $147.22(2.13% உயர்வு), $10.69 (3.15% உயர்வு), $0.000033(7.82% உயர்வு), மற்றும் 1.14(1.57% சரிவு) ஆகிய விலைகளுக்கு விற்பனையாகிறது.
வாராந்திர அட்டவணையின் படி, சோலனா 13.51% உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் போல்கா டாட் 19.43% உயர்ந்துள்ளது. மேலும், கடந்த ஏழு நாட்களில் ஷிபா இனு அதன் மதிப்பில் இருந்து 76.09% உயர்ந்துள்ளது