LOADING...
வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

எழுதியவர் Venkatalakshmi V
Feb 01, 2026
09:30 am

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், மாதத்தின் முதல் நாளான இன்று எண்ணெய் நிறுவனங்கள் வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை நாடு முழுவதும் சுமார் ரூ.49 முதல் ரூ.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று வரை ரூ.1,849.50-க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக சிலிண்டர், இன்று முதல் ரூ.50 உயர்ந்து ரூ.1,899.50-க்கு விற்பனையாகிறது. கடந்த ஜனவரி மாதம் ரூ.111 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர்

வீட்டு உபயோக சிலிண்டரில் மாற்றமில்லை

சாமானிய மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் இது தொடர்ந்து ரூ.868.50 என்ற விலையிலேயே நீடிக்கிறது. ஒருபுறம் சிலிண்டர் விலை உயர்ந்தாலும், மற்றொரு புறம் விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் ATF விலை $778.85 ஆக குறைந்துள்ளது (முன்பு $791.48). இது விமான கட்டணங்கள் குறைய வாய்ப்பாக அமையலாம். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement