Page Loader
ஆகஸ்ட் 31 வரை விமான சேவையை முழுமையாக ரத்து செய்தது கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்
ஆகஸ்ட் 31 வரை விமான சேவையை முழுமையாக ரத்து செய்தது கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்

ஆகஸ்ட் 31 வரை விமான சேவையை முழுமையாக ரத்து செய்தது கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 28, 2023
04:02 pm

செய்தி முன்னோட்டம்

குறைந்த கட்டண விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட், செயல்பாட்டு சவால்கள் காரணமாக ஆகஸ்ட் 31 வரை அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தது. முன்னதாக, விமான நிறுவனம் கடந்த மே மாதம், திவால் ஆனதாக தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தில் முறையிட்டது. மேலும், அப்போது முதல் நிறுவனம் செயல்படவில்லை. அமெரிக்காவை தளமாகக் கொண்ட என்ஜின் தயாரிப்பு நிறுவனமான பிராட் மற்றும் விட்னி குறிப்பிட்ட நேரத்தில் என்ஜினை மேம்படுத்தாத காரணத்தால் பல விமானங்களை கிடப்பில் போட வைத்தது. நிறுவனம் திவால் நிலையை அடைந்ததற்கு இதுவே முக்கிய காரணமாக் கூறப்படுகிறது.

go first cancells flights till 31st august

விரைவில் சேவையை தொடங்க உள்ளதாக கோ ஃபர்ஸ்ட் அறிவிப்பு

திவால் நிலைக்கு பின்னர், இடைக்கால நிதியுதவி மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க, கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்திற்கு கடந்த ஜூலையில் சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியது. இதன்படி விமான நிறுவனம் 15 விமானங்களுடன் தினசரி அதிகபட்சம் 114 பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியது. ஆனால், தொடர்ந்து சிக்கல்களை எதிர்கொண்டு வரும் கோ ஃபர்ஸ்ட், ஆகஸ்ட் 31 வரை விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், விரைவில் சேவையை மீட்டெடுக்க உறுதி பூண்டுள்ளதாகவும், விரைவில் டிக்கெட் முன்பதிவை தொடங்க உள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.