Loading...
பிரிக்ஸ் நாடுகளின் டாப் கோடீஸ்வரர்கள் பட்டியல்: முதலிடம் பிடித்த இந்தியர்; முழு விபரம்
பிரிக்ஸ் நாடுகளின் டாப் கோடீஸ்வரர்கள் பட்டியல்

பிரிக்ஸ் நாடுகளின் டாப் கோடீஸ்வரர்கள் பட்டியல்: முதலிடம் பிடித்த இந்தியர்; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 13, 2026
06:57 pm

செய்தி முன்னோட்டம்

உலக மக்கள் தொகையில் 49 சதவீதத்தையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 39 சதவீதத்தையும் கொண்டுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளில்தான் உலகின் முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் பில்லியனர்கள் உருவாகி வருகின்றனர். புதுடெல்லியில் 18வது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்ற நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த உச்சிமாநாட்டின் பக்கவாட்டு நிகழ்வுகளில் இந்தியாவின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரரான கௌதம் அதானி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை சந்தித்து முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

முகேஷ் அம்பானி

இந்தியாவின் முதன்மை பில்லியனர்: முகேஷ் அம்பானி ($86.3 பில்லியன்)

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, $86.3 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.2 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் இந்தியாவிலும் ஒட்டுமொத்த பிரிக்ஸ் நாடுகளின் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

பெட்ரோகெமிக்கல்ஸ், எண்ணெய், சில்லறை வர்த்தகம் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவை 500 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

மேலும் பசுமை ஆற்றல் துறையில் அடுத்த பத்தாண்டுகளில் $80 பில்லியன் முதலீடு செய்ய அம்பானி திட்டமிட்டுள்ளார்.

சாங் யிமிங்

சீனாவின் டெக் மன்னன்: சாங் யிமிங் ($69.3 பில்லியன்)

சீனாவின் முன்னணி தொழில்முனைவோரும் பைட்டான்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான சாங் யிமிங் $69.3 பில்லியன் சொத்து மதிப்புடன் சீனாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.

டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ், சர்வதேச அளவில் மாபெரும் தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறது.

சாங் யிமிங்கைத் தொடர்ந்து நோங்ஃபு ஸ்பிரிங் குடிநீர் நிறுவன அதிபர் ஜோங் ஷான்ஷான் $68.1 பில்லியன் சொத்து மதிப்புடன் சீனப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ADVERTISEMENT

அலெக்ஸி மோர்டாஷோவ்

ரஷ்யாவின் எஃகு அதிபர்: அலெக்ஸி மோர்டாஷோவ் ($37 பில்லியன்)

ரஷ்யாயாவைப் பொறுத்தவரை, முன்னணி எஃகு தயாரிப்பு நிறுவனமான செவெர்ஸ்டால் பங்குதாரர் அலெக்ஸி மோர்டாஷோவ் மற்றும் அவரது குடும்பத்தினர் $37 பில்லியன் சொத்து மதிப்புடன் ரஷ்யாவின் முதன்மை பில்லியனர்களாக உள்ளனர்.

மேலை நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் செவெர்ஸ்டால் நிறுவனத்தின் 77% பங்குகளைத் தக்கவைத்துத் தனது உள்நாட்டு வணிகத்தை வலுப்படுத்தியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து நோர்னிக்கல் நிறுவனத்தின் 35% பங்குகளை வைத்துள்ள விளாடிமிர் பொடானின் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக உள்ளார்.

ADVERTISEMENT

எட்வார்டோ சாவரின்

பிரேசிலின் மெட்டா இணை நிறுவனர்: எட்வார்டோ சாவரின்

பிரேசிலின் சாவ் பாலோ நகரில் பிறந்த எட்வார்டோ சாவரின், மார்க் ஜூக்கர்பெர்க்குடன் இணைந்து பேஸ்புக் (தற்போதைய மெட்டா) நிறுவனத்தைத் தொடங்குவதில் முக்கியப் பங்காற்றினார்.

$33 பில்லியன் சொத்து மதிப்புடன் பிரேசிலின் ஆகச்சிறந்த பில்லியனராக விளங்கும் இவர், தற்போது பி கேபிட்டல் என்ற துணிகர முதலீட்டு நிறுவனத்தின் மூலம் அதிநவீன தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த சாவரின், சர்வதேச அளவில் தனது முதலீட்டுப் பிரிவை விரிவாக்கம் செய்துள்ளார்.

ஜோஹன் ரூபர்ட்

தென்னாப்பிரிக்காவின் ஆடம்பர பிராண்ட் அதிபர்: ஜோஹன் ரூபர்ட் ($16 பில்லியன்)

தென்னாப்பிரிக்காவின் முன்னணி பணக்காரரான ஜோஹன் ரூபர்ட் $16 பில்லியன் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார்.

கார்டியர் மற்றும் மாண்ட் பிளாங்க் போன்ற உலகப் புகழ்பெற்ற ஆடம்பர பிராண்டுகளைக் கொண்ட சுவிட்சர்லாந்தின் காம்பக்னி ஃபைனான்சியர் ரிச்மாண்ட் நிறுவனத்தின் தலைவராக இவர் செயல்பட்டு வருகிறார்.

இவருடைய முதலீட்டு நிறுவனமான ரெம்க்ரோ, ஜூன் 2026 உடன் முடிந்த நிதியாண்டில் அதன் தலைப்பு வருவாய் 37 முதல் 47 சதவீதம் வரை உயரும் என பங்குதாரர்களுக்கு அறிவித்துள்ளது.

பொருளாதாரம்

பிரிக்ஸ் நாடுகளின் வளர்ந்து வரும் பொருளாதார பலம்

மேலை நாடுகளின் ஜி-7 கூட்டமைப்பிற்குப் போட்டியாக உருவெடுத்துள்ள பிரிக்ஸ் அமைப்பில் தற்போது எகிப்து, ஈரான் உட்பட 11 நாடுகள் உறுப்பினர்களாக இணைந்துள்ளன.

இந்த உறுப்பு நாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்கள் தங்களுக்குள் சர்வதேச வர்த்தகம் மற்றும் உள்ளூர் நாணயப் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகின்றனர்.

வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் இந்தப் பில்லியனர்களின் முதலீடுகள் மாபெரும் வேலைவாய்ப்புகளையும் உள்கட்டமைப்பு வளர்ச்சியையும் உருவாக்கி வருகின்றன.

வரும் காலங்களில் சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் பில்லியனர்களின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT