பைனான்ஸ் $6 பில்லியன் கிரிப்டோ திருட்டு: Proof of Reserves மூலம் உங்கள் நிதி பாதுகாப்பாக உள்ளதா என சரிபார்ப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி உலகின் முன்னணி கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளமான பைனான்ஸிலிருந்து 6 பில்லியன் டாலருக்கும் அதிகமான கிரிப்டோகரன்சிகள் திருடப்பட்டன. வடகொரிய ராணுவத்துடன் தொடர்புடைய டிரேடர்டிரைட்டர் (TraderTraitor) குழுவே இந்தச் சைபர் தாக்குதலை நடத்தியதாக எஃப்பிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க நீதித்துறை நீதிமன்ற அனுமதியுடன் 1.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோ சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதோடு, 2.7 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியையும் முடக்கியுள்ளது.
சரிபார்க்கும் வழிமுறைகள்
பைனான்ஸ் கணக்கில் Proof of Reserves பதிவைப் பெற்று சரிபார்க்கும் வழிமுறைகள்
உங்கள் கணக்கில் உள்ள நிதி பைனான்ஸின் இருப்புப் பதிவில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க முதலில் பைனான்ஸ் இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
பின்னர் சுயவிவரப் பகுதிக்கு சென்று Wallet → Verification என்பதைத் தேர்ந்தெடுத்துத் தேவையான அறிக்கைத் தேதியை அழுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் கணக்கிடப்பட்டு ஏழாம் தேதிக்குள் வெளியிடப்படும் இந்தப் பதிவில், உங்கள் கணக்கிற்கான தனிப்பட்ட Record ID மற்றும் Merkle Leaf தகவல்களை நேரடியாக பார்க்க முடியும்.
தனிப்பட்ட முறையில் முழுமையாகச் சரிபார்க்க விரும்பும் பயனர்கள் Merkle Tree தரவுகளைப் பதிவிறக்கம் செய்து பைனான்ஸின் அதிகாரப்பூர்வ வெரிஃபையரை பயன்படுத்தலாம்.
சைபர் பாதுகாப்பு
தகவல் பொருந்தாவிட்டால் செய்ய வேண்டியவையும் முக்கிய சைபர் பாதுகாப்பு எச்சரிக்கையும்
சரிபார்ப்பின் போது இருப்புத் தொகை மாறுபட்டால் தற்போதைய வாலட் இருப்பிற்கு பதிலாக குறிப்பிட்ட அறிக்கைத் தேதியில் இருந்த இருப்போடு ஒப்பிட வேண்டும்.
அப்போதும் தகவல் தவறாக இருந்தால் அதிகாரப்பூர்வ பைனான்ஸ் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
சரிபார்ப்பு கோப்புகளை சரிசெய்வதாகக் கூறும் மூன்றாம் தரப்பு செயலிகளை பதிவிறக்க வேண்டாம் என்றும், கடவுச்சொல், 2எஃப்ஏ குறியீடுகள் அல்லது ஏபிஐ விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.