
மக்களே தெரிஞ்சுக்கோங்க, அடுத்த மாதம் 24 நாட்கள் வங்கிகள் இயங்காதாம்
செய்தி முன்னோட்டம்
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் வங்கி விடுமுறைகள் என, அடுத்த மாதம்,(டிசம்பர்) 24 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, ஆன்லைன் சேவைகள் பாதிக்கப்படாது என்றும், நேரடி வங்கி சேவைகள் மட்டுமே பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்கள் சங்கம் அடுத்த மாதம் 6 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து, ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு நாளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.
அதன்படி, டிசம்பர்-4 முதல் டிசம்பர்-11 வரை வேலை நிறுத்தங்கள் நடைபெறும் என்றும், நிரந்தர பணியிடம், கூடுதல் ஆள்சேர்ப்பு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்தில், தனியார் மற்றும் அரசு வங்கிகளும் பங்கேற்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
24 நாட்கள் பாங்குகள் இயங்காது
#BankStrike#2lakhbankjobs #bankrecruitment #AIBEA pic.twitter.com/YkbNeE87kK
— CH VENKATACHALAM (@ChVenkatachalam) November 14, 2023