
ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பது கட்டாயம்: வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
மக்கள் குறைந்த மதிப்புள்ள பணத்தை எளிதில் பெறும் வகையில், அனைத்து ATM இயந்திரங்களிலும் ₹100 மற்றும் ₹200 மதிப்புடைய நோட்டுகள் இருக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனைத்து வங்கிகளுக்கும் ஏ.டி.எம். ஆபரேட்டர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தற்போது மக்கள் குறைவான பணத்தை எடுக்க முடியாமல் அவதியடைவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலைமையைத் தவிர்க்கும் வகையில், ரூ.100, ரூ.200 நோட்டுகளை ஏ.டி.எம்.களில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
அறிக்கை
RBI அறிக்கை
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் குறைந்த மதிப்புடைய பணத்தாள்கள் ஏ.டி.எம்.களில் எப்போதும் கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை படிப்படியாக செயல்படுத்த வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 75 சதவீத ஏ.டி.எம்.களில் குறைந்தபட்சம் ஒரு அறையில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் இருக்க வேண்டும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் அனைத்து ஏ.டி.எம்.களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🚨 RBI directs banks & WLAOs to enhance public access to ₹100 & ₹200 notes via ATMs.
— Fortune India (@FortuneIndia) April 29, 2025
For more news & updates, visit 🔗https://t.co/UDb3zKcZJs#RBI #ATMs #DigitalIndia pic.twitter.com/rXHfJdFfGm