இந்தியாவில் ஐபோன் 15 உற்பத்தியைத் துவக்கிய ஃபாக்ஸ்கான்
செய்தி முன்னோட்டம்
சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் ஐபோன் 15 சீரிஸின் உற்பத்தியை தொடங்கியிருக்கிறது, ஆப்பிளின் ஐபோன் உற்பத்தியாளர்களுள் ஒருவரான ஃபாக்ஸ்கான் நிறுவனம்.
செப்டம்பர் 13ம் தேதி தங்ளுடைய புதிய ஐபோன் 15 சீரிஸை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஆப்பிள். கடந்த மூன்று ஐபோன் சீரிஸ்களை விட அதிக அப்டேட்களுடன் புதிய ஐபோன் 15 சீரிஸை அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.
மேலும், ஐபோன் 15 சீரிஸின் ப்ரோ மாடல்களில் தங்களுடய 3nm சிப்செட்டான A16 பயானிக் சிப்செட்டைப் பயன்படுத்தியிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முறை புதிய ஐபோன் கேமராவிலும், முந்தை ஐபோன்களை விட நல்ல முன்னேற்றத்தை நாம் பார்க்க முடியும்.
ஆப்பிள்
இந்தியாவில் ஆப்பிளின் திட்டம்:
தற்போது வரை சீனாவிலேயே தங்களது பெரும்பான்மையான மின்னணு சாதன தயாரிப்பை மேற்கொண்டு வந்தது ஆப்பிள். ஆனால், சீனா மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் உரசல் காரணமாக, தங்களது சீன உற்பத்தியின் ஒரு பகுதியை வேறு நாடுகளுக்கு மாற்ற முடிவெடுத்து அந்நிறுவனம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியாவின் ஐபோன்கள் அசம்பிள் மட்டுமே செய்யப்பட்டு வந்தன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஐபோனின் தயாரிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்.
கடந்த மார்ச் வரையிலான நிலவரப்படி இந்தியாவில் 7% ஐபோன்கலை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறது அந்நிறுவனம். இதனை வரும் 2025-ம் ஆண்டிற்குள் 25% ஆக உயர்த்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.