ஜி20 மாநாட்டின் இரவு விருந்திற்கு அழைக்கப்பட்டுள்ள இந்திய தொழிலதிபர்கள்
இந்தியா, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக தன்னை முன்னிலை படுத்தும் நோக்கில், தொழில்முறை எதிரிகளான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி உள்ளிட்ட இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்கள் பலருக்கும், வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 9) டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டின் இரவு விருந்தில், உலக தலைவர்களுடன் கலந்துகொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவின் பொருளாதாரம் மந்தமடைந்து வரும் நிலையில், வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான இடமாக இந்தியாவை முன்னெடுக்க, இந்த ஜி 20 மாநாட்டை பயன்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முழு முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ள போகும் வெளிநாட்டு பிரமுகர்கள்
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் புதுதில்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அழைக்கப்பட்ட 500 தொழிலதிபர்களில், டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், கோடீஸ்வரர், குமார மங்கலம் பிர்லா, பார்தி ஏர்டெல் நிறுவனர்-தலைவர் சுனில் மிட்டல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அம்பானி மற்றும் அதானி குழுமத் தலைவர் ஆகியோரும் உள்ளடங்குவதாக செய்திகள் தெரிவித்தன. சங்கு வடிவத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கில் நடைபெறும் இந்த இரவு விருந்தின் மெனுவில் இந்திய பாரம்பரிய உணவுகள் இடம்பெறும் என்றும். உள்நாட்டு தானியமான தினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது