Page Loader
மீண்டும் வேதாந்தா குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் அஜய் கோயல்
மீண்டும் வேதாந்தா குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட அஜய் கோயல்

மீண்டும் வேதாந்தா குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் அஜய் கோயல்

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 24, 2023
12:26 pm

செய்தி முன்னோட்டம்

வேதாந்தா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகிய அஜய் கோயல், மீண்டும் வேதாந்த குழுமத்தில் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். வேதாந்தா நிறுவனமானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆறு தனித் தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது. இதற்கு உதவும் விதமாக அஜய் கோயல் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது. வேதாந்தா நிறுவனத்திலிருந்து விலகிய அஜய் கோயல், அதன் பின்பு இந்தியாவின் முன்னணி கற்றல் சேவை வழங்கும் நிறுவனமாக இருந்த பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தார். ஆறு மாதங்களுக்குப் பின்பு தற்போது மீண்டும் வேதாந்தாவில் இணைந்திருக்கிறார் அவர்.

வணிகம்

ஒப்புதல் அளித்த இயக்குநர் குழு: 

வேதாந்தா குழுமத்தில் அஜய் கோயலுக்குப் பின்பு தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட சோனால் ஸ்ரீவத்ஸவா அந்நிறுவனத்திலிருந்து கடந்த மாதம் விலகுவதாகத் தெரிவித்ததையடுத்து, அஜய் கோயல் மீண்டும் தலைமை நிதி அதிகாரியாக இணைந்திருக்கிறார். அஜய் கோயல் மீண்டும் நியமிக்கப்படுவதற்கு வேதாந்தா குழுமத்தின் இயக்குநர் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. வரும் அக்டோபர் 30ம் தேதி முதல் மீண்டும் பதிவியேற்கவிருக்கிறார் அஜய் கோயல். கடந்த நிதியாண்டிற்கான நிதி அறிக்கையையே பைஜூஸ் நிறுவனம் இன்னும் தாக்கல் செய்யாத நிலையில், அஜய் கோயலின் ராஜினாமா அந்நிறுவனத்திற்கு மற்றொரு பெரிய இழப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இரு நிறுவனங்களும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.