அதானி குழுமத்தின் புதிய இலக்கு: 2035-க்குள் AI டேட்டா சென்டர்கள் அமைக்க $100 பில்லியன் முதலீடு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் கௌதம் அதானி, 2035-ஆம் ஆண்டிற்குள் பசுமை ஆற்றல் மூலம் இயங்கும் மற்றும் AI தொழில்நுட்பத்திற்கு தயார் நிலையில் உள்ள Data Centres உருவாக்க $100 பில்லியன் (சுமார் ரூ. 8.3 லட்சம் கோடி) முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அதானி குழுமத்தின் $100 பில்லியன் நேரடி முதலீடு, அடுத்த பத்தாண்டுகளில் சர்வர் தயாரிப்பு, செமி கண்டக்டர் மற்றும் கிளவுட் தளங்கள் உள்ளிட்ட இதர துறைகளில் கூடுதலாக $150 பில்லியன் முதலீட்டை ஈர்க்கும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக $250 பில்லியன் மதிப்பிலான ஏஐ உள்கட்டமைப்பு இந்தியாவில் உருவாகும்.
சிறப்பம்சங்கள்
அதானியின் முதலீட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்
தற்போதுள்ள 2 ஜிகாவாட் (GW) தரவு மையத் திறனை 5 ஜிகாவாட்டாக உயர்த்த அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜிகாவாட் அளவிலான ஏஐ தரவு மையத்தையும், நொய்டா, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய இடங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனும் இணைந்து செயல்பட அதானி குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகம் தற்போது 'அறிவுசார் புரட்சி' (Intelligence Revolution) காலத்திற்குள் நுழைந்துள்ளது. எரிசக்தி மற்றும் கணினி திறனை சரியாக ஒருங்கிணைக்கும் நாடுகளே எதிர்காலத்தை வரையறுக்கும். இதில் இந்தியா தலைமை வகிக்க அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது," என்று கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
For decades, we imported technology.
— Gautam Adani (@gautam_adani) February 17, 2026
Now we are building the backbone.
Renewable energy. Grid resilience. Hyperscale AI.
A $250B intelligence ecosystem in motion.
India will not follow the AI century.
India will shape it. 🇮🇳 pic.twitter.com/fqv4S42OAb