வியக்க வைத்த அமேசானின் ரோபோ டாக்சி அறிமுகம்!
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், பல்வேறு தொழில்துறைகளில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. அதன்படி, அமேசான் சொந்தமான ஜூக்ஸ் நிறுவனம் தனது முதல் செல்ப் டிரைவிங் வாகன பிரிவில், புதிய வகை ரோபோ டாக்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ரோபோ டாக்ஸியில் அலுவலக ஊழியர்களை பயணிகளாக பொதுப்பாதையில் பயணம் செய்ய வைத்து சோதனை செய்யப்பட்டது. கலிபோர்னியாவின் போஸ்டர் சிட்டியில் உள்ள அமேசான் தலைமையகத்தில், இரண்டு ஜூக்ஸ் நிறுவன கட்டிடங்களுக்கு இடையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதற்கு, வாகனத்தை திறந்த பொது சாலையில் மக்கள் முன்னிலையில் கொண்டு செல்வது மற்றும் ஒழுங்குமுறை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு எங்கள் அணுகுமுறையை சரிபார்ப்பதற்கு இதுஒரு பெரிய படியாகும் என்று வணிக தலைமை நிர்வாகி ஐச்சா எவன்ஸ் கூறினார்.
அமேசானின் ஜூக்ஸ் நிறுவனம் வெளியிட்ட ரோபோ டாக்சி - எப்படி செயல்படும்?
மேலும், ரோபோ டாக்ஸியில் ஸ்டீயரிங் அல்லது பெடல்கள் போன்ற ஓட்டுனருக்கு தேவையான ஏதும் இல்லாமல் தானாக செயல்படுகிறது. இந்த வசந்த காலத்தில் தனது ஊழியர்களுக்காக, இரண்டு இடங்களுக்கு இடையில் அடிக்கடி பயணிக்கும் ஷட்டில் சேவையாக ரோபோடாக்சிஸை இயக்கத் தொடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, அமேசான் நிறுவனம் ஸுக்ஸ் நிறுவனத்தை 2020 ஆம் ஆண்டிலேயே முழுமையாக கையகப்படுத்தியது. அப்போதில் இருந்தே நிறுவனம் ரோபோ டாக்சியை உருவாக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்த நிறுவனத்தை அமேசான் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.