ஒரு கார் கூட விற்பனை செய்யமுடியாமல் திணறிய நிறுவனங்கள்!
இந்திய வாகனசந்தையில் பல கார்கள் அறிமுகமாகி வருகிறது. இதனிடையே இந்தியாவில் வரும் ஏப் 1ஆம் தேதிக்கு பிறகு இரண்டாம் கட்ட பிஎஸ் 6 கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் பிப்ரவரி மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளனர். இதில் ஒரு கார் கூட கடந்த பிப்ரவரி மாதம் விற்பனையாகவில்லை என்பது தான் பெரிய ஆச்சரியம். அதன்படி, நிஸான் கிக்ஸ், ஹோண்டா ஜாஸ், ஹோண்டா டபிள்யூ ஆர் வி மற்றும் ஹூண்டாய் கோனா ஆகிய கார்கள் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை. ஹோண்டா நிறுவனம் தற்போது, அமேஸ் மற்றும் சட்டி ஆகிய இரண்டு செடான் கார்களை மட்டுமே தயாரித்து வருகிறது.
ஒரு காரை கூட விற்பனை செய்யமுடியாத நிறுவனங்கள் - காரணம் என்ன?
இந்த இரு கார்களும் சேர்ந்து மொத்தம் 6,086 கார்கள் கடந்த பிப்ரவரி மாதம் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 7,187 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது விற்பனை 15 சதவீதம் குறைந்துள்ளது. நிஸான் கிக்ஸ் கார் பி0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இதையே இந்நிறுவனம் நிறுத்தப்போகிறது. இதற்குப் பதிலாக சிஎம்எஃப்-பி பிளாட்ஃபாரத்தை முற்றிலும் லோக்கலைஸ் செய்ய முயற்சி செய்கிறது. ஹூண்டாய் கோனா காரை பொருத்தவரை 2022ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிட்டது. இந்த கார் இந்தியாவில் இன்னும் வெளியாகவில்லை. இதில் முக்கிய அம்சம் என்றால் முழு சார்ஜில் 500 கி.மீ ரேஞ்ச் கொடுக்கிறது.