யமஹா YZF-R3 vs நின்ஜா 400, எது சிறந்த தேர்வு?
செய்தி முன்னோட்டம்
2015-ல் இந்தியாவில் தங்களது ப்ரீமியம் பைக்கான YZF-R3 பைக்கை விற்பனைக்குக் கொண்டு வந்தது யமஹா. ஆனால், எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால், இந்தியாவில் அதன் விற்பனையை நிறுத்தியது.
தற்போது மீண்டும் அந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் முடிவில் இருக்கிறது யமஹா. இந்த முறை கவாஸாகி நின்ஜா 400 பைக்குக்குப் போட்டியாக R3-யை களமிறக்கவிருக்கிறது யமஹா.
இரண்டில் எது பெஸ்ட்?
அளவை வைத்துப் பார்க்கும் போது உயரம், எடை, அகலம், நீளம் மற்றும் வீல்பேஸ் என அனைத்திலுமே கொஞ்சம் பெரிதாகவே இருக்கிறது R3.
பாதுகாப்புக்காக இரண்டு பைக்குகளிலுமே இரண்டு வீல்களிலும் ABS-உடன் கூடிய டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டிலும் பின்பக்கம் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் தான்.
பைக்
YZF-R3 vs நின்ஜா 400:
R3-யில் 40.4hp பவர் மற்றும் 29.4Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 321சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்க, நின்ஜாவில் 44.3hp பவர் மற்றும் 37Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 399 சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
R3-யில் முன்பக்கம் இன்வெர்டட் ஃபோர்க் கொடுக்கப்பட்டிருக்க, நின்ஜாவில் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ரூ.5.14 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது நின்ஜா 400. R3 பைக்கானது ரூ.4.51 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி நின்ஜா 400-ஐ விட விலை குறைவாக வெளியாகும் பட்சத்தில் அக்ரஸிவ்வான லுக் மற்றும் சிறந்த சஸ்பென்ஷன் செட்டப்பையும் கருத்தில் கொண்டால் R3-யே இரண்டில் சிறந்த தேர்வாக இருக்கும்.