ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடலில் மூழ்கடித்து சோதனை செய்த நபர்!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் முதன்மையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளராகவும், விற்பனையாளராகவும் விளங்கி வருகிறது ஓலா நிறுவனம்.
இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர்களின் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகளை இணையம் முழுவதும் பல்வேறு பயனர்கள் முன்வைத்திருக்கின்றனர். ஆனால், அவற்றைக் கடந்து ஓலா நிறுவன ஸ்கூட்டர்களின் விற்பனை நன்றாகவே இருக்கிறது.
அதற்குக் காரணம் இதன் டாப்-எண்டான ஓலா S1 ப்ரோ மாடல் தான். இந்த மாடலானது அனைத்து வகையிலும் சிறப்பாக இருப்பதாக இதனைப் பயன்படுத்தியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த ஸ்கூட்டரை கடலில் மூழ்கடித்து சோதனை செய்திருக்கிறார் யூடியூபர் ஒருவர். இந்த சோதனையை முழுவதுமாக வீடியோ எடுத்து, முடிவில் என்ன ஆனது என்பதனையும் தனது வீடியோவில் பதிவு செய்திருக்கிறார் அவர்.
ஓலா
ஓலா சோதனை வீடியோ:
வீடியோவின் தொடக்கத்தில் தனது ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டே கடலுக்குள் செல்கிறார் அவர்.
தண்ணீரால் எலெக்ட்ரிக் பாகங்கள் ஷார்ட் சர்க்யூட் ஆகும் ஆபத்துக்கள் நிறைந்திருக்கின்றன. எனினும், அதைப் பொருட்படுத்தாமல் அவர் அதனை கடலுக்குள் ஓட்டிச் செல்கிறார்.
ஸ்கூட்டரே வெளியே தெரியாத அளவிற்கு கடலுக்குள் அதனை அமிழ்த்துகிறார். பின்னர் அந்த ஸ்கூட்டரை கரைக்கு எடுத்து வருகிறார்.
வீடியோவின் முடிவில் கடற்கரையில் எக்கோ-மோடில் ஸ்கூட்டரை இயக்குகிறார். மேலும், தண்ணீரில் முழுவதுமாக ஆழ்த்தியும் அந்த ஸ்கூட்டரின் எந்த பாகத்திற்கும் எதுவும் ஆகவில்லை, அனைத்தும் சிறப்பாகவே வேலை செய்வதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
கடந்த மாதம் மட்டும் 35,000 ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.