2029ஆம் ஆண்டு வரை உங்கள் VinFast EV-ஐ இலவசமாக சார்ஜ் செய்துகொள்ளலாம்
செய்தி முன்னோட்டம்
வியட்நாமிய மின்சார வாகன (EV) உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கான இலவச சார்ஜிங் திட்டத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை மார்ச் 31, 2029 வரை செல்லுபடியாகும். இந்த முயற்சி, மேலும் பல நுகர்வோரை மின்சார வாகனங்களுக்கு மாற ஊக்குவிப்பதோடு, இந்த சந்தைகளில் தூய்மையான சுற்றுச்சூழலுக்கு பங்களிக்கும் என்றும் அந்நிறுவனம் நம்புகிறது.
திட்டம்
இலவச சார்ஜிங் கொள்கைக்கு யார் தகுதியானவர்கள்?
நீட்டிக்கப்பட்ட இந்த கொள்கையின்படி, மூன்று நாடுகளிலும் உள்ள அனைத்து வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உரிமையாளர்களுக்கும் இலவச சார்ஜிங் வழங்கப்படும். இந்தச் சேவை, வி-கிரீன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இயக்கப்படும் சார்ஜிங் நெட்வொர்க் மூலம் வழங்கப்படுகிறது. இது, தனியார் பயனர்கள் மற்றும் கிரீன் எஸ்எம் ரைடு-ஹெய்லிங் தளத்தின் ஓட்டுநர்கள் போன்ற போக்குவரத்து சேவைகளுக்காக தங்கள் வாகனங்களை பயன்படுத்துபவர்கள் உட்பட, ஏற்கனவே உள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் இருவரையும் உள்ளடக்கியது.
கூடுதல் ஊக்கத்தொகைகள்
'எரிவாயுவிற்கு பதிலாக மின்சாரம்' திட்டம் குறித்த ஒரு பார்வை
இலவச சார்ஜிங் கொள்கையுடன், வின்ஃபாஸ்ட்டின் தாய் நிறுவனமான வின்குரூப், இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் "பெட்ரோலுக்கு பதிலாக மின்சார வாகனத்தை பயன்படுத்துங்கள்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, பழைய பெட்ரோல் வாகனங்களிலிருந்து மாறும் வாடிக்கையாளர்களுக்கு வின்ஃபாஸ்ட் மின்சார கார்களில் கூடுதலாக 3% தள்ளுபடியும் , வின்ஃபாஸ்ட் மின்சார ஸ்கூட்டர்களில் 5% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை மார்ச் 11 முதல் மார்ச் 31 வரை செல்லுபடியாகும்.
நிறுவன உத்தி
நிறுவனம் என்ன சொன்னது?
வின்ஃபாஸ்ட்டின் உலகளாவிய விற்பனை பிரிவின் துணை தலைமை செயல் அதிகாரி டுயோங் தி து ட்ராங், நிறுவனத்தின் ஆரம்பகட்ட இலவச சார்ஜிங் கொள்கை வியட்நாம் மற்றும் பிற சர்வதேச சந்தைகளில் உள்ள நுகர்வோரால் நன்கு வரவேற்கப்பட்டதாக கூறினார். மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்கான தங்களின் உத்தியின் ஒரு பகுதியாகவே இந்த கொள்கையை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாகவும் அவர் மேலும் கூறினார். "செயல்பாட்டு செலவுகள் ஏறக்குறைய பூஜ்ஜியமாக குறைக்கப்படும்போது, பசுமை போக்குவரத்திற்கு மாறுவதற்கு நுகர்வோருக்கு அதிக நம்பிக்கையும் ஊக்கமும் ஏற்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.