
Yezdi Roadster v/s Royal Enfield Meteor 350: எந்த பைக் சிறந்தது?
செய்தி முன்னோட்டம்
Yezdi பைக், ராயல் என்பீல்ட் நிறுவனத்திற்கு போட்டியாக களம் இறக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பைக்கில் எது பெஸ்ட் என்பதைப் பற்றி பார்ப்போம்.
இவை இரண்டுமே, கிருஸர் பைக் டிசைன் கொண்டே வருகின்றன. Yezdi பைக்கில் சிறிய ஹாண்டில் பார் உள்ளதால் ஹைவே செல்வதை விட நகர்ப்புறங்களுக்கு நன்றாக உள்ளது.
அடுத்து, என்ஜினைப் பொறுத்த வரையில் ராயல் என்பீல்ட் மீட்டியோர் என்ற பெரிய என்ஜின் கொண்டுள்ளது.
அதில், ஒரு சிங்கிள் சிலிண்டர் 349 சிசி 4, வால்வு ஏர் கூல்டு 5 ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளன.
ஆனால், Yezdi ரோடிஸ்டெர் சற்று குறைவான சிங்கள் சிலிண்டர் 334 சிசி, 4 வால்வு லிக்விட் கூல்டு 6 ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டுள்ளது.
Royal Enfield Meteor 350
விலை, கூடுதல் விவரக்குறிப்புகள் மற்றும் வேறுபாடுகள்
பின்னர், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கில், இரண்டு பைக்கிலும் டூயல் கிராடல் பிரேம் உள்ளது. இரண்டு பைக்குகளும் டூயல் சேனல் ABS கொண்டுள்ளது.
எடையில், மீட்டியோர் 191 கிலோ மற்றும் Yezdi 184 கிலோவாக உள்ளது. என்பீல்ட் 15லிட்டர் ரோடிஸ்டெர் 12.5 லிட்டர் சிறிய டேங்க் கொண்டு வருகிறது.
மேலும், இந்த பைக்குகளில் இரண்டிலும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
விலை விபரம்
ராயல் என்பீல்ட் மீட்டியோர் 2.01 லட்சம் ருபாய் ( எக்ஸ் ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. அதே நேரம் Yezdi ரோடிஸ்டெர் 1.98 லட்சம் ருபாய் ( எக்ஸ் ஷோரூம்) சற்று குறைவான விலையில் கிடைக்கிறது.