RE சூப்பர் மீட்டியாரின் வெயிட்டிங் பீரியட் எவ்வளவு?
தங்களுடைய மீட்டியார் மாடலின் 'பிக் பிரதர்' வெர்ஷனான சூப்பர் மீட்டியார் 650 மாடலை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். வெளியானது முதலே வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது இந்த ப்ரீமியம் க்ரூஸர். தற்போது இந்த பைக்கின் வெயிட்டிங் பீரியடானது 2 முதல் 3 மாதங்கள் வரை இருக்கிறது. குறைந்தபட்சமாக டெல்லியில் 2 மாதங்கலும், அதிகபட்சமாக் மும்பை மற்றும் பெங்களூருவில் 3 மாதங்களும் இந்த பைக்கிற்கு வெயிட்டிங் பீரியடாக இருக்கிறது. சென்னையில் இந்த சூப்பர் மீட்டியார் 650 பைக்கை வாங்க வேண்டும் என்றால் 2 முதல் 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இந்தியாவில் ரூ.3,4,900 எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது சூப்பர் மீட்டியார் 650.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய பைக்குகள்:
ஏற்கனவே தங்களுடைய போர்ட்ஃபோலியோவில் கடந்த சில வருடங்களாக பல புதிய மாடல்களை சேர்த்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இனி வரும் ஆண்டுகளிலும் பல புதிய மாடல்களை வெளியிடத் தங்கள் லைன்-அப்பில் வைத்திருக்கிறது அந்நிறுவனம். மீட்டியார் 350 உருவான அதே J ப்ளாட்ஃபார்மில் அடுத்த தலைமுறை புல்லட்டை உருவாக்கி வருகிறது ராயல் என்ஃபீல்டு. தங்களின் புதிய 450சிசி இன்ஜினுடன் கூடிய ஹிமாலயன் 450-யையும் அந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. ஸ்கிராம் 411-க்கு மாற்றாக ரோட்ஸ்டர் 450 பைக் ஒன்றையும் தயாரித்து வருகிறது அந்நிறுவனம். இவை தவிர 650சிசி இன்ஜினுடன், ஷாட்கன் 650, ஃபேரிங்குடன் கூடிய காண்டினென்டல் GT 650 மற்றும் ஸ்கிராம்ப்லர் 650 ஆகியவையும் ராயல் என்ஃபீல்டின் லைன்-அப்பில் இருக்கின்றன.