LOADING...
பிளெக்ஸ்-ஃபியூவல் கார்கள் என்றால் என்ன? மின்சார மற்றும் ஹைபிரிட் கார்களில் இருந்து இவை எப்படி வேறுபடுகின்றன? முழு விபரம்
பிளெக்ஸ்-ஃபியூவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் செயல்பாடுகள்:

பிளெக்ஸ்-ஃபியூவல் கார்கள் என்றால் என்ன? மின்சார மற்றும் ஹைபிரிட் கார்களில் இருந்து இவை எப்படி வேறுபடுகின்றன? முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
May 29, 2026
07:43 pm

செய்தி முன்னோட்டம்

பிளெக்ஸ்-ஃபியூவல் வாகனம் (FFV) என்பது ஒரே எஞ்சினில் பெட்ரோல் மற்றும் எத்தனால் கலவைகளைப் பயன்படுத்தி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு காராகும். சாதாரண கார்கள் E10 அல்லது E20 போன்ற குறைந்த அளவு எத்தனாலை மட்டுமே தாங்கும் நிலையில், FFV கார்கள் அதிகளவு எத்தனாலைத் திறம்பட எரிக்கும். கரும்பு மற்றும் விவசாயக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் ஒரு உயிரி எரிபொருளாகும் (Biofuel) என்பதால், இது பெட்ரோலை விடக் மிகக் குறைவாகவே மாசை வெளியிடுகிறது. இவற்றில் E100 என்பது முற்றிலும் தூய்மையான எத்தனால் எரிபொருளையும், E85 என்பது 85% எத்தனால் கலவையையும் குறிக்கிறது.

எஞ்சின் இயங்கும் முறை

பிளெக்ஸ்-ஃபியூவல் எஞ்சின்கள் செயல்படும் விதம் மற்றும் சாதாரண கார்களில் இருந்து உள்ள மாற்றங்கள்

இக்கார்களில் உள்ள நவீன சென்சார்கள், எரிபொருள் தொட்டியில் இருக்கும் எத்தனால் மற்றும் பெட்ரோலின் கலவை விகிதத்தைத் தொடர்ந்து துல்லியமாக ஆய்வு செய்யும். அதற்கேற்ப, காரின் எஞ்சின் கட்டுப்பாட்டு அலகு (ECU) எரிபொருள் செலுத்தப்படும் நேரத்தைத் தானாகவே மாற்றியமைத்து காரை இயக்க உதவும். எத்தனால் உலோகங்களை அரிக்கும் தன்மை கொண்டது என்பதால், இக்கார்களில் துருப்பிடிக்காத எஃகு எரிபொருள் குழாய்களும், எத்தனாலைத் தாங்கும் ரப்பர் குழாய்களும் பயன்படுத்தப்படுகின்றன. பெட்ரோலை விட எத்தனாலாறின் ஆற்றல் அடர்த்தி குறைவு என்பதால், அதிக எரிபொருளைச் செலுத்த ஏதுவாக மறுசீரமைக்கப்பட்ட இன்ஜெக்டர்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கும்.

கார்களின் ஒப்பீடு

இவி மற்றும் ஹைபிரிட் கார்களில் இருந்து பிளெக்ஸ்-ஃபியூவல் கார்கள் எவ்வாறு வேறுபடுகின்றன?

இயக்க முறை: மின்சார கார்கள் முற்றிலும் பேட்டரியிலும், ஹைபிரிட் கார்கள் எஞ்சின் மற்றும் பேட்டரி கூட்டணியிலும் இயங்குகின்றன. ஆனால் பிளெக்ஸ்-ஃபியூவல் கார்கள் முற்றிலும் எரிபொருள் எஞ்சினில் மட்டுமே இயங்குபவை. உள்கட்டமைப்பு: இவி கார்களுக்கு நாடு முழுவதும் புதிய சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்; ஆனால் பிளெக்ஸ்-ஃபியூவல் கார்களுக்குத் தற்பொழுது இருக்கும் பெட்ரோல் பங்குகளையே சிறிய மாற்றங்களுடன் உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். நுகர்வோர் மாற்றம்: முழுமையான மின்சாரக் கார்களுக்கு மாறுவதில் தயக்கம் காட்டும் நாடுகளுக்கு, வழக்கமான எஞ்சின் மற்றும் எரிபொருள் நிரப்பும் முறையைக் கொண்ட பிளெக்ஸ்-ஃபியூவல் கார்கள் ஒரு மிகச்சிறந்த இடைக்கால மாற்றாக அமைகின்றன.

Advertisement

நன்மைகள் மற்றும் சவால்கள்

பிளெக்ஸ்-ஃபியூவல் கார்களின் முக்கிய நன்மைகள் மற்றும் சவால்கள் என்னென்ன?

நன்மைகள்: இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைப்பதுடன், கரும்பு பயிரிடும் உள்நாட்டு விவசாயிகளின் வருமானத்தையும், கிராமப்புறப் பொருளாதாரத்தையும் பெருமளவு உயர்த்துகிறது. குறையும் மைலேஜ்: எத்தனாலாறின் குறைந்த ஆற்றல் அடர்த்தி காரணமாக, அதிக எத்தனால் கலவையில் காரை இயக்கும்போது சாதாரண பெட்ரோல் காரை விட மைலேஜ் ஓரளவிற்குக் குறைய வாய்ப்புள்ளது. உணவு vs எரிபொருள் விவாதம்: எத்தனால் உற்பத்திக்காக அதிகளவில் விவசாய நிலங்கள் மற்றும் பயிர்கள் திசைதிருப்பப்பட்டால், அது உணவு உற்பத்திப் பற்றாக்குறை மற்றும் நீர் ஆதாரங்களின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

Advertisement