100 கிமீ வேகம், மிரட்டல் லுக்! இந்தியாவில் 15 மாநிலங்களில் கால்பதிக்கும் வியட்நாமின் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
செய்தி முன்னோட்டம்
வியட்நாமை சேர்ந்த முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட், இந்தியாவில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை தொடங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, நாட்டின் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 34 நகரங்களில் 50-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
தூத்துக்குடி ஆலை
தூத்துக்குடி ஆலை மற்றும் விநியோக நெட்வொர்க்
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ஏற்கனவே மின்சார வாகன உற்பத்தி ஆலையை அமைத்து வரும் வின்ஃபாஸ்ட், பயணிகள் கார் பிரிவைத் தொடர்ந்து இரு சக்கர வாகனப் பிரிவிலும் களமிறங்குகிறது.
டெல்லி-என்சிஆர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் தங்களது ஷோரூம்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.
விநியோகஸ்தர்கள் வியட்நாமில் உள்ள வின்ஃபாஸ்ட் உற்பத்தி ஆலையைப் பார்வையிட்ட பிறகே இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
புதிய மாடல்கள்
வைப்பர் மற்றும் ரசாட்: புதிய காப்புரிமை மாடல்கள்
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் அறிமுகம் செய்யவுள்ள மாடல்கள் மற்றும் விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஜூன் மற்றும் ஆகஸ்ட் 2026-இல் காப்புரிமை பெறப்பட்ட வைப்பர் மற்றும் ரசாட் ஆகிய ஸ்கூட்டர்கள் முதன்மையாகக் களம் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ரசாட் மாடல் 7.1 kW மோட்டார் மற்றும் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய மேக்சி-ஸ்கூட்டர் அமைப்பைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.
கடும் போட்டி
டிவிஎஸ், பஜாஜ், ஏதர் கார்களுக்குக் கடுமையான போட்டி
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனப் பிரிவில் டிவிஎஸ் ஐகியூப், பஜாஜ் சேத்தக், ஏதர் ரிஸ்டா மற்றும் ஹீரோ விடா போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே வலுவான இடத்தைப் பிடித்துள்ளன.
இவற்றுக்கு சவாலாகத் தனது சர்வதேசத் தரம் மற்றும் விரிவான சார்ஜிங் உள்கட்டமைப்புடன் வின்ஃபாஸ்ட் களமிறங்கவுள்ளது.
2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இதன் அதிகாரப்பூர்வ விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.