இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட ஹார்னெட் 2.0 பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா
2023ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட ஹார்னெட் 2.0 பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. சின்ன சின்ன டிசனை மாற்றங்களுடன், இன்ஜின் அப்டேட்டையும் பெற்றிருக்கிறது புதிய ஹார்னெட் 2.0. டிசைன் மாற்றமாக, பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது புதிய கிராஃபிக்ஸை அளித்திருக்கிறது ஹோண்டா. இதனைத் தவிர்த்து, ஸ்பிளிட் சீட், ஷார்ட் மஃப்ளர் மற்றும் 10 ஸ்போக் அலாய் வீல்களைப் பெற்றிருக்கிறது புதிய ஹோண்டா. மேலும், முகப்பு விளக்குகள் முதல் டெய்ல் லேம்ப் வரை அனைத்தையும் எல்இடி விளக்குகளாகவே அளித்திருக்கிறது அந்நிறுவனம். அலுமினியம் ஃபுட் பெக்ஸ் மற்றும் இரண்டு வீல்களிலும் பெட்டல் டிஸ்க் பிரேக் ஆகியவையும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
2023 ஹோண்டா ஹார்னெட் 2.0: இன்ஜின் மற்றும் விலை
புதிய ஹோண்டா ஹார்னெட்டில், BS6, இரண்டாம் நிலை மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்ட இன்ஜினைக் கொடுத்திருக்கிறது ஹோண்டா. சிங்கிள் சிலிண்டர் கொண்ட, இந்தப் புதிய 184.4சிசி இன்ஜினானது, 17.03hp பவரையும், 15.9Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. இத்துடன் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச்சுடன் கூடிய 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், புதிய ஹோண்டாவில், ஹசார்டு லைட், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் புதிய ஹார்னெட் 2.0வை ரூ.1.39 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.