2024ல் வெளியாகும் புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குகள்
இந்தியாவில் தங்களுடைய இருப்பை வழுவாக்க 2024ம் ஆண்டு நான்கு புதிய பைக் மாடல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. ஒரு பிரிவில் இல்லாமல் பல்வேறு பிரிவுகளில், இந்த நான்கு புதிய பைக்குகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறதது அந்நிறுவனம். இந்த நான்கு மாடல்களில் ஒரு மாடலான ஷாட்கன் 650 ஏற்கனவே சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற தங்களுடைய மோட்டோவெர்ஸ் நிகழ்வில் அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு. ராயல் என்ஃபீல்டின் பெரிய இன்ஜினான 650சிசி இன்ஜினைக் கொண்டு வெளியாகவிருக்கும் இந்த மாடலை, அந்நிறுவனத்தின் சூப்பர் மீட்டியார் மாடலை விட சற்றுக் குறைவான விலையில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
ராயல் என்ஃபீல்டின் புதிய பைக் மாடல்கள்:
கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியான ஹண்டர் 350 மாடலின் பெரிய வெர்ஷனான ஹண்டர் 450 மாடலை அடுத்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இந்தாண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட ட்ரையம்ப் ஸ்பீடு 400 மாடலுக்குப் போட்டியாக இந்த பைக்கை களமிறக்கவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. ஜாவா 42 பாபர் மற்றும் பெரக் மாடல்களுக்குப் போட்டியாக, தங்களது கிளாஸிக் 350 மாடலை அடிப்படையாகக் கொண்ட புதிய பாபர் 350 மாடலை அடுத்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இந்தியாவில் தங்களுடைய 650சிசி லைன்அப்பில் புதிய பைக் மாடலாக ஸ்கிராம்ப்ளர் 650 மாடலையும் அடுத்த ஆண்டே வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.