அடுத்து வெளியாகவிருக்கும் ஹீரோ பைக்குகள் என்னென்ன?
செய்தி முன்னோட்டம்
சில நாட்களுக்கு முன்பு தான் அப்டேட் செய்யப்பட்ட பேஷன் பிளஸ்ஸை இந்தியாவில் வெளியிட்டது ஹீரோ. இனி வரும் நாட்களில் ஹீரோ வெளியிடவிருக்கும் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.
எக்ஸ்ட்ரீம் 160R:
அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160R மாடலை இன்னும் சில நாட்களில் வெளியிடவிருக்கிறது ஹீரோ. USD ஃபோர்க், புதிய கலர்கள் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆகியவற்றை புதிய எக்ஸ்ட்ரீமில் எதிர்பார்க்கலாம்.
கரிஸ்மா XMR:
ZMR வடிவில் விற்பனையை விட்டுச் சென்ற கரிஸ்மா XMR வடிவில் மீண்டும் வெளிடப்படவிருக்கிறது. ஹீரோவின் முதல் லிக்விட்-கூல்டு இன்ஜினை இந்த மாடலே பெறவிருக்கிறது.
210சிசி இன்ஜின், முழுவதும் ஃபேரிங் செய்யப்பட்ட டிசைன் மற்றும் ஸ்பிளிட் சீட் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். R15-க்கு போட்டியாகக் களமிறங்குகிறது கரிஸ்மா XMR.
ஹீரோ
எக்ஸ்பல்ஸ் 400:
இதுவரை தாங்கள் போட்டியிடாத செக்மண்டான 400சிசி செக்மண்டில் எக்ஸ்பல்ஸ் 400-உடன் களமிறங்கவிருக்கிறது ஹீரோ.
புதிய லிக்விட்-கூல்டு இன்ஜினுடன் ராயல் என்ஃபீல்டு மற்றும் பஜாஜ்-ட்ரையம்ப் ஆகிய நிறுவனங்களுடன் போட்டியிடவிருக்கிறது ஹீரோ.
400சிசி ஸ்போர்ட் டூரர்:
மேற்கூறிய 400சிசி இன்ஜினைப் பயன்படுத்தியே ஸ்போர்ட் டூரர் மாடல் ஒன்றையும் ஹீரோ உருவாக்கலாம் எனத் தெரிகிறது. இந்த புதிய மாடலை கரிஸ்மா அல்லது எக்ஸ்ட்ரீம் ஆகிய ஏதாவது ஒரு பெயரின் கீழ் அந்நிறுவனம் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எக்ஸ்ட்ரீம் 200S 4V:
எக்ஸ்பல்ஸ் 200-ல் பயன்படுத்தப்பட்ட 4V இன்ஜினுடன் கூடிய புதிய எக்ஸ்ட்ரீமை வெளியிடவிருக்கிறது ஹீரோ. முந்தைய மாடலை விட அதிக பவர் மற்றும் டார்க்கை இந்த பைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.