
இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் பைக்குகள்.. பகுதி 1!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் வரும் மாதங்களில் வெளியாகவிருக்கும் பைக்குகளின் லைன்-அப் இது.
ஏப்ரிலியா:
சிறிய இன்ஜின் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை இந்தியா சாலைகளில் சோதனை செய்து வருகிறது ஏப்ரிலியா. RS 660 பைக்கின் டிசைனுடன் சிறிய 440 சிசி இன்ஜினை சேர்த்து உருவாக்கி வருகிறது ஏப்ரிலியா. கேடிஎம் 390, நின்ஜா 300 மற்றும் நின்ஜா 400 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக செப்டம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது.
டுகாட்டி:
ஏற்கனவே டெஸர்ட்X மற்றும் மான்ஸ்டர் SP பைக் மாடல்களை கடந்த மாதங்களில் இந்தியாவில் வெளியிட்டது டுகாட்டி. இதனைத் தொடர்ந்து இனி வரும் மாதங்களில் ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4 SP2, டியாவெல் V4, ஸ்க்ராம்ப்லர் 2G மற்றும் மல்ட்டிஸ்ட்ராடா V4 ரேலி ஆகிய பைக்குகளை வெளியிடவிருக்கிறது அந்நிறுவனம்.
புதிய பைக்
ஹார்லி டேவிட்சன்:
இந்தியாவின் முன்னணி பைக் தயாரிப்பாளர்களுள் ஒருவரான ஹீரோவுடன் கைகோர்த்து இந்தியாவில் தொடக்க நிலை பைக்குகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிரது ஹார்லி டேவிட்சன். இந்தக் கூட்டணியில் வெளியாகவிருக்கும் முதல் பைக்கின் படங்கள் இணையத்தில் கசிந்திருந்தது.
ஹீரோ மோட்டோகார்ப்:
இந்த ஆண்டு மட்டும் ஐந்து பைக்குகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹீரோ நிறுவனம். பேஷன் ப்ளஸை மீண்டும் கொண்டு வருகிறது ஹீரோ. அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 200S மற்றும் புதிய கரிஷ்மா மாடல் ஒன்றையும் இந்த ஆண்டு லைன்-அப்பில் வைத்திருக்கிறது ஹீரோ.
வெஸ்பா:
இந்தியாவில் பியாஜியோ கால்பதித்து 25-ம் ஆண்டை முன்னிட்டு பல புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் வெளியிடவிருக்கிறது வெஸ்பா. பெரிய இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர்கள் மற்றும் வெஸ்ப GTS மாடல் ஆகியவையும் லைன்-அப்பில் இருக்கின்றனவாம்.