Page Loader
இந்தியாவில் அப்பாச்சி RTR 160 4V பைக்கின் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்திய டிவிஎஸ்
இந்தியாவில் அப்பாச்சி RTR 160 4V பைக்கின் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்திய டிவிஎஸ்

இந்தியாவில் அப்பாச்சி RTR 160 4V பைக்கின் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்திய டிவிஎஸ்

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 10, 2023
08:29 am

செய்தி முன்னோட்டம்

அப்பாச்சி RTR 160 4V பைக் மாடலின் புதிய வேரியன்ட்களை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது, இந்தியாவைச் சேர்ந்த இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பாளரான டிவிஎஸ். மூன்றாவது ஆண்டாக கோவாவில் நடைபெற்ற தங்களுடைய ப்ளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் நிகழ்வான டிவிஸ் மோட்டோசோல் நிகழ்வில் இந்தப் புதிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது டிவிஎஸ் நிறுவனம். மேலும், இந்த நிகழ்விலேயே பெட்ரோனாஸூடனான கூட்டணியை அடுத்த சீசனிலும் தொடரவிருப்பதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். அப்பாச்சி RTR 160-யின் புதிய வேரியன்ட் தவிர்த்து, புதிய எலெக்ட்ரிக் அப்பாச்சி ரேஸ் பைக் ஒன்றையும் இந்த நிகழ்வில் டிவிஎஸ் அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ்

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V: வசதிகள் மற்றும் விலை 

புதிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில், பாதுகாப்பை அதிகரிப்பதற்காக டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளைக் கொடுத்திருக்கிறது டிவிஸ் நிறுவனம். மேலும், இந்தப் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்தியதன் மூலமாக இந்தியாவில் தங்களுடைய போர்ட்ஃபோலியோவையும் அதிகரித்திருக்கிறது அந்நிறுவனம். லைட்னிங் ப்ளூ மற்றும் மேட் பிளாக் என இரண்டு புதிய நிறங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V. இந்த பைக்கை இந்தியாவில் ரூ.1.35 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். சாதாரணமாக இந்த பைக் மாடலானது இந்தியாவில் ரூ.1.24 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.