ஏர்பேக்குகள் வெடித்து சிதற வாய்ப்பு: புழக்கத்தில் இருக்கும் 50,000 கார்களை ஓட்ட வேண்டாம் என்று டொயோட்டா வேண்டுகோள்
விற்பனையாகி புழக்கத்தில் இருந்த 50,000 கார்களை ஓட்ட வேண்டாம் என்று அந்த வாகன உரிமையாளர்களிடம் டொயோட்டா வலியுறுத்தியுள்ளது. மேலும், அவர்களது கார்களில் உள்ள பழுதடைந்த ஏர்பேக்குகளை விரைவில் சரி செய்யுமாறு அவர்களிடம் டொயோட்டா கேட்டுக் கொண்டுள்ளது. ஏர்பேக்குகளை மாற்றும் வரை அல்லது சரிசெய்யும் வரை கார்களை ஓட்டக்கூடாது என்றும் டொயோட்டா கூறியுள்ளது. 2003-2004 கொரோலா, 2003-2004 கொரோலா மேட்ரிக்ஸ் மற்றும் 2004-2005 RAV4 ஆகிய மாடல்களுக்கு தான் இந்த எச்சரிக்கை வெளியாகி உள்ளது. அந்த மாடல் கார்களில் உள்ள ஏர்பேக்குகள் பழமையானதால், உள்ளே இருக்கும் ஒரு பகுதி வெடித்துச் சிதறக்கூடும் என்று கூறப்படுகிறது.
டொயோட்டா நிறுவனம் வெளியிட்ட அறிவுரை
"கூறப்பட்ட வாகனங்களில் இருக்கும் சில ஏர்பேக்குகள் அவசர நிலையில் உள்ளதால், அவை திரும்ப அழைக்கப்படுகின்றன. அந்த வாகனங்கள் பழையதாகிவிட்டதால், ஏர்பேக்கிற்குள் இருக்கும் ஒரு பகுதி வெடித்து, கூர்மையான உலோகத் துண்டுகள் வெளியே வர வாய்ப்புள்ளது, இது ஓட்டுநர் அல்லது பயணிகளுக்கு கடுமையான காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும். இலவச பாதுகாப்பு ரீகால் பழுதுபார்க்கும் வரை உரிமையாளர்கள் அந்த வாகனங்களை ஓட்டக்கூடாது. டொயோட்டா உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை பழுதுபார்ப்பதற்குப் பதிலாக தங்கள் உள்ளூர் டீலரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்று டொயோட்டா ஒரு அறிவுரையை வெளியிட்டுள்ளது.