Page Loader
புதிய 10 எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் டொயோட்டா - வெளியான அப்டேட்!
2026 ஆண்டிற்க்குள் டொயோட்டாவின் 10 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளது

புதிய 10 எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் டொயோட்டா - வெளியான அப்டேட்!

எழுதியவர் Siranjeevi
Apr 08, 2023
04:26 pm

செய்தி முன்னோட்டம்

முன்னணி கார் நிறுவனமான டொயோட்டா 2026 ஆண்டிற்க்குள் 10 புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கொஜி சடோ தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆண்டுக்கு டொயோட்டா 15 லட்சம் கார்களை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரிக் வாகன விற்பனையில் டொயோட்டா பின் தங்கி இருப்பதால், கவனம் செலுத்தி வருகிறது. மேலும், எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்காக தனி விசேஷ பிரிவு ஒன்றை உருவாக்கி வருகின்றனர். இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள ஒருவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் அவர் அடுத்த மாத அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் டொயோட்டா 21, 650 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

10 புதிய எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யப்போகும் டொயோட்டா